ETV Bharat / state

ராஜ உடையில் காட்சியளித்த சிங்கம்பட்டி ஜமீன்.. கோலகலமாக நடந்த நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் விழா! - Sorimuthu Ayyanar Temple Festival

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 9:58 AM IST

Sorimuthu Ayyanar Temple Festival: திருநெல்வேலி காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டதுடன், உடலில் சங்கலியால் அடித்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சொரிமுத்து அய்யனார் கோயில் விழா
சொரிமுத்து அய்யனார் கோயில் விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: பாபநாசம் அருகே காரையாறு வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது. அதன்படி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அதிகாலை முதலே அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் நீராடி, பொங்கலிட்டும், சங்கிலியால் அடித்தும் வழிபடத் தொடங்கினர். இரவில் கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

முன்னொரு காலத்தில் பாபநாசம் வனப்பகுதி உள்பட அனைத்தும் சிங்கம்பட்டி ஜமீன் குடும்ப கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. எனவே தான் கடைசி ஜமீனான முருகேச தீர்த்தபதிக்கே மரியாதை அளித்து வந்தனர். வழக்கமாக ஆடி அமாவாசை விழா அன்று இரவில் சிங்கம்பட்டி ஜமீன் முருகேச தீர்த்தபதி ராஜ அலங்காரத்தில் தர்பாரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் சில ஆண்டுக்கு முன் அவர் மறைந்துவிட்டதால் அவரது புகைப்படம் ராஜ அலங்காரத்துடன் தர்பாரில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இவ்விழாவிற்காக திருநெல்வேலி மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்தனர். இவர்கள் கோயிலைச் சுற்றிய வனப்பகுதியில் குடில் அமைத்து குடும்பம் குடும்பமாக தங்கினர். மேலும் கோயிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 அரசு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக சுழற்சி முறையில் இயக்கப்பட்டது. விழாவையொட்டி கோயிலை சுற்றி வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையினர், தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

join ETV Bharat WhatsApp Channel Click here
join ETV Bharat WhatsApp Channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆடி அமாவாசை: கும்பகோணம் ஆஞ்சநேயருக்கு ஒகு டன் எடையில் 40 வகை காய்கனிகளால் சாகம்பரி அலங்காரம்! - Aadi Amavasai 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.