ETV Bharat / state

திருநெல்வேலி பொருநை இலக்கிய திருவிழா! இந்த ஆண்டில் என்னென்ன சிறப்புகள்? - திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி

Porunai Literary Festival: திருநெல்வேலியில் ஜனவரி 30, 31ஆம் தேதிகளில் பொருநை இலக்கியத் திருவிழா நடக்க உள்ளதாகவும், பிப்ரவரி 3முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tirunelveli Porunai Literary Festival starts tomorrow
பொருநை இலக்கியத் திருவிழா நாளை துவங்குகிறது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 7:30 PM IST

பொருநை இலக்கியத் திருவிழா நாளை துவங்குகிறது

திருநெல்வேலி: தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை திருநெல்வேலி மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது. இதனை கொண்டாடும் விதமாகவும், இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்திடவும், இளம் தலைமுறையினரிடையே இலக்கியம், புத்தகம், கலைகள் குறித்து ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டு தோறும் இலக்கிய திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எழுத்தாளர் நாறும்பூநாதன் உடன் இருந்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "2024இல் இரண்டாவது பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா வருகிற 30 (நாளை) மற்றும் 31 ஆகிய இரண்டு தினங்கள் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் மற்றும் பிபிஎல் மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த இலக்கிய திருவிழாவில் தென் மாவட்டங்களின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் தங்களின் இலக்கிய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பங்கேற்கின்றனர்.

மேலும், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விவாத மேடை, இலக்கிய வினாடி வினா போட்டிகள், தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு பேச்சு போட்டிகள் என இலக்கியம் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏழாவது பொருநை புத்தகத் திருவிழா பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடக்கிறது.

இந்த கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. மேலும், புத்தகக் கண்காட்சி நடைபெறுவதையொட்டி தினமும் சிறந்த ஆளுமைகள் பங்குபெறும் கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள் பல்வேறு அரசு துறைகளின் சிறப்பு நிகழ்வுகள் போன்றவை நடைபெற உள்ளன.

மேலும், மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் மாவட்டத்தின் தொன்மையான கைத்தொழில்கள் மற்றும் கலைகள் குறித்தும் அத்துறை சார்ந்த வல்லுனர்களால் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி இல்லா புத்தகத் திருவிழாவாக நடத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார். முன்னதாக இலக்கியத் திருவிழா குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: நாளை முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பேருந்து இயக்கம்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.