ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கொலை..மூவர் கைது!

திருப்பத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தங்கை கணவனை அடித்து கொன்ற நபர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோலார்பேட்டை காவல் நிலையம்
ஜோலார்பேட்டை காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 8:03 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தங்கை கணவனை அடித்து கொன்ற வழக்கில் தொடர்புடைய நபர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சுமார் 37 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள்,"முதற்கட்டமாக வாகன சோதனையை தீவிரப்படுத்தினோம். அப்போது கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்தோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். காரின் உரிமையாளர் கமலநாதனை வரவழைத்து விசாரணை செய்தோம். கார் உரிமையாளர் தமது காரை முருகன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் பகுதியை சேர்ந்த முருகன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். அவருக்கு இரண்டு மகள் மற்றும் 19 வயதில் ஒரு மகன் உள்ளனர். முதல் மகள் 23 வயதான நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். முருகன் கடந்த 23ஆம் குடும்பத்தோடு திருப்பத்தூருக்கு சென்றுள்ளார். எனவே, மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தங்கையின் கணவரான மணிகண்டன் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமி கொலை; ஊதுபத்தி ஏத்தி நாடகமாடியது அம்பலம்!

பின்னர் திருப்பத்தூரிலிருந்து வீடு திரும்பிய முருகன், தனது மகளை அழைத்து வருவதற்காக மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது அழுதபடி இருந்த அவரது மகள், 'மணிகண்டன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன்( 19 வயது) ஆகியோர் இருவரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காடமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பின்னர் கமலநாதன் காரில் மணிகண்டனின் சடலத்தை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் சாலை ஓரமாக வீசிவிட்டு சென்றுள்ளனர்,"என கூறினர். இதனையடுத்து முருகன், அவரது 19 வயது மகன் மற்றும் கமலநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.