கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்பி கனிமொழி தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதி மக்கள் இயக்கம் அமைப்புகளிடம் கலந்துரையாடி கருத்துக்கள் மற்றும் மனுக்களை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி, மேயர் பிரியா, அப்துல்லா, கோவி செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, "ஓசூரில் நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர், குழுவைச் சந்தித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளைச் சார்ந்த மக்கள் அமைப்புகள், தங்களது கோரிக்கைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையோடு இன்று எங்களிடம் மனு அளித்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வாங்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, தொகுத்துத் தேர்தல் அறிக்கையாக முதலமைச்சர் வெளியிடுவார்.
மாநில நிதிப்பகிர்வு: பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது சொன்ன கருத்துகளுக்கு, முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை பிரதமராகிய பின் எடுத்து இருக்கிறார்.
திமுக கூட்டணி: திமுக நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை நிச்சயம் வெல்லும்” என்றார். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் களம் காண்பீர்களா குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர் முடிவு எடுப்பார்” என பதிலளித்தார்.
தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு, “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாநில முதலமைச்சர்களே களத்திற்கு வந்து போராட வேண்டிய சூழலுக்கு, மத்திய அரசு மாநில முதலமைச்சர் மற்றும் மாநிலங்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழக மக்களுக்கு ஒரு பயனும் இல்லை" - அண்ணாமலை!