தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கு. விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் யாரும் ஆஜராக நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மட்டும் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிபதி செல்வம் வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! - AIADMK Election Manifesto