ETV Bharat / state

தேனியில் பாலியல் தொந்தரவு செய்து பெண் கொலை; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! - Theni Sexual harassment Case

Theni Women Sexual harassment and Murder: தேனி மாவட்டத்தில் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபதாரம் விதித்து தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றம்
தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 10:40 PM IST

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 48 வயது பெண். இவரது கணவர் இறந்து விட்டதால், அவரது தாய் வீட்டில் வந்து தங்கி இருந்த நிலையில், அவரது தாயும் இறந்து விட்டதை தொடர்ந்து, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர், அடிக்கடி பெட்டி கடைக்கு சென்று அந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு அந்த நபர் பெட்டிக்கடையில் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த நபர், 48 வயது பெண்ணை சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் பெட்டிக்கடை முன்பு காயத்துடன் இருந்த அப்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருசநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 38 வயது நபாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என அறிவித்த நீதிபதி அனுராதா, அவருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தேதி தீர்ப்பளித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.