ETV Bharat / state

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் என்றால் என்ன? திருமாவளவனும், சீமானும் சாதித்தது என்ன? - Recognized parties of Tamil Nadu - RECOGNIZED PARTIES OF TAMIL NADU

RECOGNISED PARTY: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுதியுள்ளது, இதில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளன. இந்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் என்ன? இதற்கான தகுதிகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பு கூறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 1:55 PM IST

Updated : Jun 10, 2024, 12:21 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்றுள்ளனர். இருந்த போதிலும் அனைத்து முகாம்களிலும் இந்த தேர்தல் புதிய அடையாளங்களை உருவாக்கியுள்ளது. இதில் திமுக-வின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் தனது கட்சியின் வெற்றி குறித்து செய்தியாளரிடம் கூறும்போது ”இந்த மக்களவை தேர்தல் வெற்றி, விசிக-வை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான தகுதியை வழங்கியுள்ளது” என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசிய போது "இனி நா. த. க மற்றவை அல்ல தனி ஒரு கட்சி, அதுவும் அங்கீகாரம் பெறப்போகும் கட்சி" எனக் கூறினார். இவ்வாறு அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுப்பது ஏன் அவசியாகிறது, என்ற கேள்விக்கான பதிலை தற்போது பார்க்கலாம்.

அங்கீகரிக்கப்ட்ட கட்சி என்றால் என்ன? இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்குச் சேவை செய்ய தொடங்கப்படுவது தான் அரசியல் கட்சிகள். இந்தியக் குடிமக்களாக இருக்கும் ஒவ்வொருவரும் அரசியல் கட்சிகளைத் தொடங்கவோ, பிடித்த அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வது அவர்களது அடிப்படை உரிமையாகும்.

அந்த அடிப்படையில், தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் தன் சேவையை ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு அல்லது தேசத்திற்காக தன் செயல்படுவதன் மூலம் அது மாநிலக்கட்சி என்றும், தேசிய கட்சி என்றும் அந்தஸ்தைப் பெறுகின்றது. அரசியல் கட்சிகளாக பதிவு பெறும் அனைத்தும் கட்சிகளும் அங்கீகாரம் பெறுவதில்லை. எந்த ஒரு அரசியல் கட்சி தனக்கு உள்ள மக்கள் சக்தியைத் தேர்தல் வாக்குகள் மூலம் நிரூபிக்கிறதோ, அந்த கட்சியே இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் 1968ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் எந்த அடிப்படையில் அங்கீகாரம் பெறுகின்றன என்பதை அளவுகோல்கள் மற்றும் நிபந்தனைகளை வகுத்து வைத்துள்ளது. அதன் அடிப்படையிலே அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் தரப்படுகிறது.

அங்கீகரிக்க நிரூபிக்க வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக ஆவதற்குப் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1. ஒரு கட்சி சட்டமன்ற தேர்தலின் மொத்த வாக்குகளிலிருந்து 6 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதுடன், குறைந்த பட்சம் 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

2. அதேபோல ஒரு கட்சி தன் மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளிலிருந்து குறைந்த பட்சம் 6 விழுக்காடு வாக்குகளை வைத்திருப்பதுடன் குறைந்தது 1 மக்களவை தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. ஒரு கட்சி சட்டமன்ற தேர்தலில், குறைந்தது மூன்று தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) மொத்த தொகுதி எண்ணிக்கையில் 3 விழுக்காடை கணக்கில் கொண்டு இரண்டில் எது பெரிதோ அந்த எண்ணிக்கையில் தொகுதியை வென்றிருக்க வேண்டும்.

  • உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. இதில் 3 விழுக்காடு என்பது 8 தொகுதிகள் வரும். எனவே தமிழ்நாட்டைப் பொறுததவரையிலும் 8 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. இதுவே குறைந்த தொகுதிகளாக, 8 தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக இருந்தால் 3 சதவீதம் என்பது 2 தொகுதிகள் தான் வரும். இந்த சூழலில் 3 தொகுதிகளில் கட்டாயம் வென்றிருக்க வேண்டும்.

4. ஒரு கட்சி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெறுகிறது.

5. 2011ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த புதிய நிபந்தனை படி, ஒரு கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெறுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி ஆக ஒரு கட்சி உருவெடுக்க கீழுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1.ஒரு கட்சி மக்களவை அல்லது சட்டமன்ற தேர்தலில் வெவ்வேறு 4 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 விழுக்காடு வாக்குகளை பெறுவதுடன், 4 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

2. ஒரு கட்சி மக்களவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் இருந்து 2 விழுக்காடு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அதாவது தமிழகத்தில் குறைந்தது 11 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் அதுவும் 3 வெவ்வேறு மாநில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. ஒரு கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்ததின்படி தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

அங்கீகரிகாரிக்கப்பட்ட கட்சி பெறும் அந்தஸ்துகள்: இவ்வாறு மாநில, தேசிய அங்கிகாரம் பெறும் கட்சிகள் கட்சி சின்னங்களை நிரந்தரமாகப் பெற்றுக் கொள்ளலாம். ஆகாஷ்வானி/தூர்தர்ஷன் மூலம் இந்த கட்சிகள் குறிப்பிட்ட நேரங்களை வாங்கி ஒளிபரப்பு செய்யலாம். வாக்காளர் பட்டியல் நகல்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரே ஒரு முன்மொழிபவர் மட்டும் இருந்தால் போதும். இந்த கட்சிகள் அதிகபட்சமாக 40 நட்சத்திர பரப்புரையாளர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நட்சத்திர பேச்சாளர்கள் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அதிகபட்சம் 20 பேர்தான் இருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்: இதுவரை இந்தியாவில் 7 தேசிய கட்சிகள் உள்ளன. அவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளாகும். தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகள் 4 அவை, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக).

இதையும் படிங்க:"விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்!

Last Updated : Jun 10, 2024, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.