ETV Bharat / state

பன்னாட்டு போர் பயிற்சி: சூலூர் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Kovai Tarang Shakti 2024

Tarang Shakti 2024: சூலூர் விமானப்படை தளத்தில் பன்னாட்டு போர் பயிற்சி முகாம் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுப் பகுதிகளில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை தரங்க சக்தி 2024
கோவை தரங்க சக்தி 2024 (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 1:12 PM IST

கோயம்புத்தூர்: 'தரங்க சக்தி 2024' என்ற பெயரில் இந்தியாவின் முதல் பன்னாட்டு விமானப் பயிற்சி, ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 14 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்குபூரிலும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்கின்றன. மேலும், 10 நாடுகள் தங்களது போர் விமானங்களுடன் பயிற்சிக்கு வந்துள்ளனர். இந்தப் பயிற்சி இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வெளிப்படுத்தி, பங்கேற்கும் நாடுகளின் ராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், முதல் கட்டமாக நேற்று (ஆக.6) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கோவை சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் துவங்கிய இந்த பயிற்சியில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, இந்தியா தனது சொந்த தயாரிப்பு விமானங்கள் மற்றும் உபகரணங்களான தேஜாஸ், ரபேல், மிராஜ் 2000, ஜாகுவார் மற்றும் எம்ஐஜி 29 ஆகியவற்றைக் காட்சிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் பயிற்சி, தரை பயிற்சி, பாதுகாப்பு கண்காட்சிகள், கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் இந்த பன்னாட்டு விமானப் பயிற்சியில் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர், வீராங்கனைகள் அதிநவீன போர் விமானங்களுடன் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படை சார்பில் தேஜஸ், சுகாய் உள்ளிட்ட பல அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்ற நாடுகளின் போர் விமானங்களுடன் போர் ஒத்திகை பயிற்சியில் கூட்டாக ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிராம மக்களுக்கு எச்சரிக்கை: இந்த நிலையில், இந்த பயிற்சி நடவடிக்கையை கருத்தில் கொண்டு சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானப்படை தளத்தை சுற்றியுள்ள காடம்பாடி, காங்கேயம் பாளையம், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் போர் விமானங்கள் பறப்பதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டக்கூடாது என சூலூர் காவல் நிலைய போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இது மட்டும் அல்லாது, காவல் துறையின் எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரே பள்ளியில் 6 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை.. புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.