ETV Bharat / state

பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் ஆஜராக நீதிபதி உத்தரவு..! - balveer singh

balveer singh: பல்புடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் மீண்டும் மார்ச் 28ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராக, மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

balveer singh
பல்புடுங்கிய விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 12:36 PM IST

Updated : Feb 15, 2024, 6:33 AM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரத்தில், சிபிசிஐடி சார்பில் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் திருநெல்வேலி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 4வது முறையாக இந்த வழக்கானது இன்று(பிப்.14) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 12 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்1இல் ஆஜராகினர். இந்த வழக்கில் ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை.

அப்பொழுது எதிர்தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் வழக்கறிஞர், இந்த வழக்கை அரசு வழக்கறிஞர் தான் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும், அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை தொடர்பாக 14 பேர் மீண்டும் மார்ச் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கடந்த நான்கு முறையும், இந்த வழக்கு விசாரணைக்காக ஏஎஸ்பி பல்வீர் சிங் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி, சித்திரவதை செய்வதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் கடந்த மார்ச் 26ஆம் தேதி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், ஏப்.17, 18 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணையும் நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி மற்றும் ஏடிஎஸ்பி சங்கர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள், மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1இல் நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு சம்பந்தமாக அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை? - திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Feb 15, 2024, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.