ETV Bharat / state

சென்னை மெரினா மரணங்கள்: 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு! - CHENNAI AIR SHOW DEATH

மெரினாவில் விமான சாகச நிகழச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர்களில் நான்கு பேர்
இறந்தவர்களில் நான்கு பேர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 7:17 PM IST

சென்னை: மெரினா கடற்கரையில், 92வது விமானப்படை தின நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதை காண தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் மெரினாவில் கூடினர். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் சென்னையில் நேற்று காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை முடித்த பின்பு மெரினா கடற்கரையில் இருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல்களும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதனால் கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் 90 க்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்படை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு சாகச நிகழ்ச்சியை காண வந்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) மற்றும் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) ஆகியோர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இவர்கள் இருவரையும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் மரணம்: இதேபோல, சென்னை மடுவங்கவரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41) மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணி (59) ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் மடுவங்கரையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவரின் உடல் பிரதே பரிசோதனை முடிந்த நிலையில் ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதேபோல, சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார். பின்னர் பார்த்துவிட்டு திரும்பும் போது மனைவி, குழந்தையை ஓரிடத்தில் இருக்க சொல்லிவிட்டு வாகனத்தை எடுத்துவர அவர் மட்டும் சென்றுள்ளார்.

பின்னர் வாகனத்தை எடுத்துக்கொண்டு திரும்பியவர் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது கார்த்திகேயன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை மெரினாவில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 5 நபர்களின் உடல்களும் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் அவரவர் ஒப்படைக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.