ETV Bharat / state

'மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது'.. TANTEA நீதிமன்றத்தில் வாதம்! - Tan tea Vs Manjolai Tea Estate - TAN TEA VS MANJOLAI TEA ESTATE

TN Manjolai Issue: டேன் டீ மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என டேன் டீ (Tan Tea) நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 5:53 PM IST

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். BBTC நிறுவனம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்காது. ஆகவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும், அரசுப் பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டேன் டீ (Tan Tea) நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "டேன் டீ தொடக்கத்தில் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், "டேன் டீ நிர்வாகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அவர்களை கட்டாயப்படுத்தவும் இயலாது. இந்த வழக்கில் மனுதாரர்கள் பலரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க விரும்புவதால், வழக்கை விரிவான விசாரணைக்காக ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். பின்னர், மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "நீதிமன்றம் ஏற்கனவே மாஞ்சோலை பகுதி மக்களே அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.. மயிலாடுதுறையில் போலீசாருக்கு காயம்! - CPI and CPM protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.