சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 3.302 மையங்களில் நடத்தப்பட்ட இந்த பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்த நிலையில், வரும் மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது.
இந்த பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேர்விற்கான விண்ணப்பத்தில் அளித்த தொலைபேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்தும் பள்ளிகளுக்கும் வரும் 5ஆம் தேதி ஞாயிற்க்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்பட உள்ளது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும், அனுமதிக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை வழக்கு.. முக்கிய நபரின் திடுக்கிடும் வாக்குமூலம்! - Admk Ex Councilor Son Murder Case