ETV Bharat / state

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு செக்..? ஜனவரிக்கு தயாராகிறதா தவெக.. காரணம் என்ன? - vijay tvk conference

tvk party conference postponed: விஜயின் த.வெ.க மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டால் மாநாட்டிற்கான தேதி மாற்றம் தொடர்பாக பிரபல புதுவை மாநில ஜோதிடரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய் (கோப்புப் படம்)
புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 12:40 PM IST

விழுப்புரம்: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த வாரம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அங்கு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கு கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த 85 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், மேலும், மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 70 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாகவும், ஐந்து ஏக்கர் நிலமானது இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து மாநாடுக்காக குறிப்பிட்ட இடத்தில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்திருந்த நிலையில், அனுமதி வழங்குவதில் இழுபறி நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியாளரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து விழுப்புரம் எஸ்பி தான் முடிவெடுப்பார் என்றும் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து மாற்றம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து எஸ்பி ஆய்வு செய்து முடிவு எடுத்து அறிவிப்பார் என்று ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கடந்த பத்து நாட்களாக விடுமுறையில் இருந்ததால் விவகாரம் தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ள அந்த மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாகவும், விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல் தெரிவித்தார்.

மேலும், விடுமுறை முடிந்து இன்று மாலைக்குள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் மாநாடு நடத்த அனுமதி கூறும் வி.சாலையில் பகுதியானது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அருகிலேயே விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளதால், வார இறுதி நாட்களில் இச்சுங்கச்சாவடியில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்லும் சூழ்நிலையில், மாநாடு நடைபெறும் பட்சத்தில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என நினைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் இதேபோன்று உளுந்தூர்பேட்டை எறையூர் அருகே மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநாடு நடத்திய போது, மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு உளுந்தூர்பேட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகும், அதனை கருத்தில் கொண்டு மேற்கண்ட வி சாலை பகுதியில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் இது குறித்து கூறியதாகவும், வேறு இடத்தை காட்டுங்கள் நாங்கள் அதற்கான அனுமதி வழங்குகிறோம் என அதிகாரிகள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், வரும் 23-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான நேரம், முக்கிய பிரமுகர்களின் விவரங்களை ஐந்து நாட்களுக்குள் அளிக்குமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டால், மாநாட்டிற்கான தேதி மாற்றம் தொடர்பாக பிரபல புதுவை மாநில ஜோதிடரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அணுகியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல எனவும் மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 100 அடி கம்பத்தில் தவெக-வின் பிரம்மாண்ட கொடி..தேனியில் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.