சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மழை குறித்து மக்கள் புகார் அளிப்பதற்கும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், நாளை அதிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Insane storm, in no time many places in Chennai has got 50 mm intha rate la pona fastest century vanthudum pola. The sound and light works are scary ones. The storm is moving in from south to north direction.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2024
Red Thakkalis are rare in NEM, we have to wait another 7 months to… pic.twitter.com/H7z5ltH61W
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் சில நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எட்டி செஞ்சுரி அடிக்கும் எனவும், சென்னையில் இடி மின்னல் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
KTCC (Chennai) heavy rains ahead tonight to tomorrow morning.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2024
-------------------------
Slowly the clouds from Pondy and Cuddalore is shifting up. And it is nighttime, night to morning time namma chinnarasu KTCC ah pudikka mudiyathu.
Enjoy the rainy night ahead !!!!
Coimbatore… pic.twitter.com/uOACit9pWB
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ புயல் வரும் முன்னரே சென்னையில் பல இடங்கள்ல 50 மி.மீ மழை பெய்துள்ளது. இதே ரேட்ல போனா வேகமாக செஞ்சுரி வந்துடும் போல. இடி மற்றும் மின்னல் சென்னையில் பயங்கரமாக உள்ளது. புயல் தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இந்த இடி மின்னல் சத்தத்தை கேட்க இன்னும் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
Heavy rains recorded across KTCC, next rain bands are getting ready and will move in now.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 15, 2024
Today more rain bands will come on and off. Tomorrow the Depression is expected come close to North Tamilnadu near Chennai coast.
மேலும், KTCC ( காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. இன்று இரவு முதல் காலை வரை நம்ம சின்னராசு KTCCஐ கையில் பிடிக்க முடியாது. நல்ல மழை பெய்யும். மக்கள் குளுமையான இரவை அனுபவிக்கலாம். அடுத்த மழைக்கான மேகக்கூட்டங்கள் தயாராகி வருகின்றன. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்