ETV Bharat / state

சுற்றுலா துறையை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீடுகள் - சட்டப்பேரவையில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்! - TAMIL NADU INDUSTRY INVESTMENT PLAN - TAMIL NADU INDUSTRY INVESTMENT PLAN

Industries & Commerce Department PLAN: தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கான நடப்பு நிதியாண்டின் (2024-25) மானியக் கோரிக்கையின்போது 23 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன.

தொழிற்பூங்கா உருவாக்கம் வரைப்படம்
தொழிற்பூங்கா உருவாக்கம் வரைப்படம் (CREDITS- DIPR X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 9:43 PM IST

சென்னை: தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையில் இந்த ஆண்டிற்கான (2024-2025) புதிய 23 அறிவிப்புகள் இன்று பேரவையில் வெளியிட்டது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:

  1. தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை ( Space Teach Policy) வெளியிடப்படும்.
  2. சுழற்பொருளாதார (circular economy) துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்.
  3. பொம்மைகள் பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்புத் திட்டம் வெளியிடப்படும்.
  4. படைப்பு திறன் பொருளாதாரத்தை (creative economy) அடிப்படையாகக் கொண்டு தொழில் வளர்ச்சி அடையும் வகையில், ஒரு செயல் திட்ட வரைபடம் வெளியிடப்படும்.
  5. தொழிலகங்கள் மற்றும் வர்த்தகச் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி, தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் தொடங்கப்படும்.
  6. ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கு டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk) உருவாக்கப்படும்.
  7. சுற்றுலாத் துறையில், முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காகவும், அந்நிறுவனங்களுக்கான ஆதரவுச் சேவைகளை அளித்து, அத்திட்டங்கள் செயல்படுவதை கண்காணித்திடவும், வழிகாட்டி நிறுவனத்தில் ஒரு சிறப்பு அமைப்பு (Special Cell for Tourism Investment Promotion & Facilitation) ஏற்படுத்தப்படும்.
  8. தமிழ்நாட்டில் சுற்றுலாவை ஊக்குவித்து முதலீட்டை ஈர்க்கும் வண்ணம், சுற்றுலாதலங்களில் உகந்த இடங்களை சிப்காட் தேர்வு செய்து, தனியார் பங்களிப்புடன் சுற்றுலாதலங்களின் உள்கட்டமைப்பை ஏற்படுத்தும்.
  9. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் சுமார் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
  10. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
  11. அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்கா ஒன்று உருவாக்கப்படும்.
  12. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
  13. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலும், கூத்தாநல்லூர் வட்டத்திலும் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
  14. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
  15. சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
  16. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா ஒன்று உருவாக்கப்படும்.
  17. கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் விதம் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும்.
  18. திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் விதம் புதிய மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படும்.
  19. தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழில் பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்.
  20. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
  21. சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமையப் பெற்றுள்ள தொழிற் சா லை க ளின் தயாரிப்புப் பொருட்களுக்கான காட்சி மையம் (Product Display Centre) 5 மற்றும் 6 திட்ட மதிப்பீட்டில், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் உருவாக்கப்படும்.
  22. தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி மற்றும் மாம்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக மொத்தம் 6 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.
  23. ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் M-Sand உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: நீட் விலக்கு தீர்மானம்; கள்ளக்குறிச்சி விவகாரத்தை மடைமாற்ற திமுக நாடகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.