ETV Bharat / state

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசுப் பணி..! தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரம் என்ன? - DMK Ruling Period

TN Government Job Appointments: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government Job Appointments
அரசுப் பணி நியமனங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 7:42 PM IST

சென்னை: சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தற்போது இது குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலமாகக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக ஜனவரி 2024 வரையில் 27,858 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித் துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்பட்டுள்ளன.

இதுமட்டும் அல்லாது, ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. அந்த வகையில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில், தேர்வு வாரியம் மூலமாக 27,858 நபர்களும்; பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 நபர்களும் என மொத்தமாக 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, தமிழ் நாட்டில் படித்த இளைஞர்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடத் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உத்தரப்பிரதேச காவலர் எழுத்துத்தேர்வு அனுமதிச் சீட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.