ETV Bharat / state

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? - ஆளுநர் ரவி கேள்வி - Governor RN Ravi - GOVERNOR RN RAVI

Kallakurichi case accused: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் ரவி (கோப்புப்படம்)
ஆளுநர் ரவி (கோப்புப்படம்) (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 8:21 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியபட்டனரா எனவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுகொள்ள முடியாது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு (ஜுன் 26) தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''நாளை சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நாளாக கொண்டாப்படுகிறது. நாளைய தினம் மற்ற நாட்களைபோல சாதாரண நாள் அல்ல. போதைப்பொருட்களால் பலர் உயிரை இழக்கின்றார்கள். மற்ற ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு போதையினால் இருண்ட நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டவர்கள், மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தி இறந்துள்ளனர். இது மிகவும் சோகமான நிகழ்வாகும். போதை கலாச்சாரம் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி தற்கொலை செய்யவும், குற்றச்செயல்களுக்கும் தூண்டுகிறது. போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. போதை பழக்கத்தால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களினால் நம் நாடு பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. இவற்றால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது. பஞ்சாப் மாநிலம் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 1980கள் வரை பஞ்சாப் மாநிலம் வேளாண் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்தது. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் போதைப் பொருள் அம்மாநிலத்தை என்ன செய்துள்ளது என பார்த்துள்ளோம்.

நான் தமிழ்நாடு மாநிலத்திற்கு வந்த நாள் முதல் எண்ணற்ற பெற்றோர்கள் வந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இங்கு போதைப்பொருள் இல்லை என கூறி வருகிறோம்.

இதுகுறித்து நான் கேட்டால் இங்கு கஞ்சா மட்டுமே உள்ளதாகவும் மற்ற போதைப்பொருட்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். கடந்த ஆறு மாதமாக போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள பெற்றோர்களுக்கே Synthetic drugs எங்கு உள்ளது என தெரியும் நிலையில் இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போயிற்று?

முதலில் நாம் இங்கு போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். இல்லை என்றால் இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 20 பேர் உயிர் இழப்புக்கு பின்பு கைது சம்பவம் நடந்தது. அதன்பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

பொதுமக்களின் உயிர் முக்கியமானது. போதைப்பொருட்கள் கிடைப்பதை தடுத்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியபட்டனரா? கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பவம் நடைபெற்ற அடுத்த மூன்று நாட்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன்பின் வழக்கம் போல மாறிவிடுகின்றன. தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

போதைப் பொருட்களில் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் உருவாகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையாகி பல குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. என்ஐஏ நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஹெராயின் இறக்குமதி செய்வது தெரிய வந்துள்ளது.

கேரளா கடல் பகுதியில் ஹெராயின் பிடிபட்ட நேரத்தில் அவர்களிடம் AK 47 துப்பாக்கிகள் இருந்தன. போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக மேற்கொண்டு, தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழங்குவதை உடனடியாக தடுக்கும் என நம்புகிறேன்'' என்று ஆளுநர் ரவி கூறினார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்; ஆர்.என்.ரவி நாளை திடீர் டெல்லி பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.