சென்னை: எம்.ஆர்.சி நகரில் உள்ள இந்தியன் வங்கி விருந்தினர் மாளிகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அமைச்சர் உடனான இந்த சந்திப்பு பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா சீதாராமனுடனான இந்த சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர்கள் வினோஜ் பி செல்வம், பால் கனகராஜ், எஸ்.ஜி.சூர்யா மற்றும் பிற அணி நிர்வாகிகள் டால்ஃபின் ஸ்ரீதர், ஷெல்வி, ஆனந்த பிரியா, ரங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Today @BJP4TamilNadu State Office-bearers had Breakfast Meeting with Honourable Finance Minister of India @nsitharaman Amma in #Chennai ! pic.twitter.com/tAC7aSkvIm
— Dr.SG Suryah (@SuryahSG) September 21, 2024
நிதி அமைச்சரின் சந்திற்கு இடையே காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு நிர்வாகிகளுடன் தமிழக அரசியல் குறித்தும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் கோவையில் நடைபெற்ற வணிகர்களுக்கான கூட்டத்தில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் பேசியது சர்ச்சை குறித்தும் அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான தகவல் குறித்தும் நடைபெற்ற கூட்டத்தில் விவரம் கேட்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.. அணிவகுப்புக்கு அனுமதி கோரும் வானதி.. அமைதி காக்கும் காவல்துறை!
மேலும், தமிழக பாஜகவின் முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலையுடன் மிக நெருக்கமாக இருக்கும் கரு.நாகராஜ், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போதய ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கவில்லையா? அல்லது அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லையா என்பது தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்த கூட்டத்தை தமிழக பாஜக முன்னாள் பொதுச் செயலாளராக இருந்து பாலியல் சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவன் ஏற்பாடு செய்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு மீண்டும் பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதற்கான நகர்வாக இது பார்க்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்