ETV Bharat / state

"குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - மதுரை செய்திகள்

Right to Information Act: குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் சிறந்த அலுவலர்களுக்கான விருதுகளுக்கு எந்தவித அரசாணையும் கிடையாது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலர் விருதுகளுக்கு அரசாணை கிடையாது
ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 11:06 AM IST

Updated : Feb 4, 2024, 2:18 PM IST

ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன்

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால், காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி, சுகாதாரம், தீயணைப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, கல்வி, பொதுப் பணி, கூட்டுறவு உள்ளிட்ட அரசு துறைகளைச் சோ்ந்த அலுவலா்களில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு எந்தவித அரசாணையோ அல்லது நிதி ஒதுக்கீடோ கிடையாது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. இது அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறந்த அரசு அலுவலர் என்ற பணி பாராட்டுச்சான்றும், பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ் அச்சடிப்பதற்கும், பதக்கம் வழங்குவதற்கும் எந்த நிதி பயன்படுத்தப்படுகிறது? இந்த நிகழ்வுக்கு அரசு அனுமதி உள்ளதா? என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்கப்பட்டது.

இதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்நிகழ்வுக்கு எந்த ஒரு அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நிகழ்வைக் கண்காணிக்கக்கூடிய சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்தில், இதற்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அத்துறையிலிருந்து, இந்த நிகழ்வுக்கு எந்த வித அரசு அனுமதியும் இல்லை, இதற்காக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர்.

எனவே, சட்டப்பூர்வமாக இல்லாத ஒரு நிகழ்வை, மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் செயல்படுத்துவது சரியானது அல்ல. இதனால், சட்டப்படி அல்லாத நிகழ்வை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கும், சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டியை பிறப்பித்து, அரசாணையை பிறப்பிக்க வேண்டி, தான் அரசிற்கு அளித்த மனு கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், மனுவின் நிலை குறித்து, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட நிலையில், பொதுத்துறை அலுவலகம், தங்களது கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு என்பதால், தமிழக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்து, அதற்கான ஆதார கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளனர்.

நிலுவையில் உள்ள மனுவின் நிலை குறித்து முதலமைச்சரின் அலுவலகத்திற்கு ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு, முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து, இது எங்கள் அலுவலகம் சார்ந்தது அல்ல. பொதுத்துறையை அணுகவும் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த மனுவை, அதிகாரிகள் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை. முதலமைச்சரின் பார்வைக்கு சென்றிருந்தால், இதற்கான அரசாணையை உடனடியாக பிறப்பித்து இருப்பார்கள்.

எனவே, பணி பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு, வருங்காலங்களில் வழிகாட்டி மற்றும் அரசாணை பிறப்பித்து சட்டப்படி அல்லாத நிகழ்வை சட்டப்படி மாற்றி, உரிய நீதி கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கான காலணி கணக்கெடுப்பு பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை..

Last Updated : Feb 4, 2024, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.