ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்; 14வது நாளாக தொடரும் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது! - SSTA Protest

SSTA Protest: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி, 14வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி 14 வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 5:06 PM IST

வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, 14வது நாளாக இன்று (மார்ச் 3) இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை இதுவரை ஒரு முறை கூட அழைத்துப் பேசவில்லை எனவும், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. இதை களையக்கோரி, பல்வேறு போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிக்கையில், வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்த கருத்துக்களைக் கேட்டு, அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த நிலையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 14வது நாளாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி பேருந்தில் சென்றனர். மேலும், மண்டபத்தில் தங்கி இருக்கும் போதும், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், சொன்னதை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடைகளை அடைத்து நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம்.. ஆம்பூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.