ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | டி.ஆர்.பாலு | திமுக | 7,58,611 |
2 | பிரேம்குமார் | அதிமுக | 2,71,582 |
3 | வேணுகோபால் | தமாகா | 2,10,110 |
4 | ரவிச்சந்திரன் | நாதக | 1,40,233 |
- 5மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 490304 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 174621 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 140660, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 89368 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 315683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 402049 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 144529 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 104328, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 74159 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட 257520 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் - 4.00PM
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு 372585 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பிரேம்குமார் 136042 வாக்குகளும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் 95237, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் 69575 வாக்குகளும் பெற்றுள்ளனர் - 3.30PM நிலவரம்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இத்தேர்தலில் மொத்தம் 14,35,243 (60.25%) வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 2% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
2019ல் யாருக்கு வெற்றி?: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 7,93,281 வாக்குகளை குவித்தார். பாமகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 2,85,326 வாக்குகளை அள்ளினார். மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீதர் 1,35,525 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் 84,979 வாக்குகளையும் பெற்றனர். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் மொத்தம் 14,06,782 (65.7%) வாக்குகள் பதிவாகின.
இதையும் படிங்க: தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024; ஸ்ரீபெரும்புதூரை மீண்டும் கைப்பற்றுமா திமுக? - TN Sriperumbudur RESULT 2024