புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (ஜூலை 11) சிறை பிடித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்த இலங்கை கடற்படை, அவர்களது மூன்று படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, சிறைபிடித்த தமிழக மீனவர்களை ஊர்காவல் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேபோல், கடந்த ஜூன் 30ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கைது செய்தனர்.
இதில், 22 மீனவர்கள் முதலில் விடுவிக்கப்பட்டனர். படகை ஓட்டிச் சென்ற 3 மீனவர்களுக்கு கூடுதல் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அந்த மீனவர்களும் சில தினக்களுக்கு முன் விடுவிக்கப்பட்டு நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை சிறையில் இருந்த 3 மீனவர்கள் தாயகம் திரும்பினர்.. அரசு வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு! - fisherman Arrival in TN