ETV Bharat / state

சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி; 3.5 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்! - Air Force adventure programme

விமானப்படை சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டி.எம்.எஸ் வரை இன்று 3.5 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெரினாவில் மக்கள் கூட்டம், சென்னை மெட்ரோ ரயி
மெரினாவில் மக்கள் கூட்டம், சென்னை மெட்ரோ ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 3:42 PM IST

Updated : Oct 6, 2024, 4:34 PM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விமான சாகச நிகழ்ச்சியை முன்னிட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலை முதல் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஏஜி டி.எம்.எஸ் மெட்ரோ இடையே ரயில்கள் 3.5 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் டிப்போ மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ இடையே 7 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்! - Velachery railway station

மேலும் பச்சை வழித்தடத்தில் புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ முதல் பரங்கி மலை இடையே 7 நிமிட இடைவெளிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 6, 2024, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.