ETV Bharat / state

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா? - நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! - TIRUNELVELI MAYOR SARAVANAN - TIRUNELVELI MAYOR SARAVANAN

TIRUNELVELI MAYOR SARAVANAN: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NELLAI MAYOR SARAVANAN
திருநெல்வேலி மேயர் சரவணன் புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 2:52 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவை சார்ந்த சரவணன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பதவி ஏற்றார். இவர் பதவியேற்று ஒரு சில கூட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கும் அவருக்கும் நேரடியாகவே மாமன்ற கூட்டத்தில் மோதல் நடந்து வந்தது.

மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு 35க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர். இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

கட்சித் தலைமையின் அறிவுரையின்படி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோர், மாமன்ற உறுப்பினர்களை கன்னியாகுமரி மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாக அப்போது பேசப்பட்டது. இந்நிலையில் உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு நடந்த இரண்டு கூட்டங்களிலும் தொடர்ந்து மோதல் போக்கே நீடித்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் 10 உறுப்பினர்கள் மட்டுமே மொத்தமாக கூட்டத்திற்கு வந்திருந்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து மேயர் சரவணன் மாமன்ற கூட்ட அவை விட்டு வெளியேறினார்.

சென்னைக்கு அவசர அழைப்பு: இந்நிலையில் திமுக தலைமை திடீரென நேற்று திருநெல்வேலி மேயர் சரவணனை சென்னைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை சந்திக்க வலியுறுத்தபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட பேச்சுவார்க்கைக்கு பிறகு அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தலைமையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று நெல்லை மேயர் ராஜினாமா தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது குறித்து தெரிந்து கொள்வதற்காக, ஈடிவி பாரத் ஊடகம் திருநெல்வேலி மேயர் சரவணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. மேலும் முறைப்படி மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுக்க வேண்டும்.

எனவே, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்ட போது அவரும் பதில் அளிக்க வில்லை. அதே சமயம் ஆணையர் தரப்பில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் சென்னைக்கு சென்று மேயரிடம் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலில் குறைவான ஓட்டுக்கள் வாங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தமிழகத்தில் திமுக கூட்டணி 40-க்கு 40 இடங்களை பெற்றிருந்த நிலையிலும், பல இடங்களில் திமுக குறைந்த வாக்குகளை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில், பல்வேறு மாநகராட்சிகளில் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியான நிலையில், தற்போது நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூரில் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியார் நெஞ்சுவலி என நாடகம்! மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம் - Perambalur bribe case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.