ETV Bharat / state

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கூலிப்படை புரோக்கர் ஹரிகரனை காவலில் எடுக்கப்போவதாக தகவல்! - armstrong murder accused - ARMSTRONG MURDER ACCUSED

armstrong murder case update: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூன்று பேருடன் சேர்த்து அண்மையில் கைதான ஹரிகரனையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதி ஹரிகரன், ஆர்ம்ஸ்ட்ராங் (கோப்புப் படம்)
கைதி ஹரிகரன், ஆர்ம்ஸ்ட்ராங் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 2:16 PM IST

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த 5ம் தேதி பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 16 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில், திருவேங்கடம் என்ற முக்கிய கைதியை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். மேலும், இந்த வழக்கில் முதலில் 11 பேர் கைது செய்தபோது அவர்களை போலீஸ் காலில் எடுத்து ஐந்து நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலு, திருமலை, அருள் ஆகிய மூவரையும் மீண்டும் போலீஸ் காலில் எடுத்து விசாரணை செய்ய செம்பியம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மூன்று பேரையும் காவலில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று வரை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிகரன் என்பவர் இந்த கொலையில் பின்னணியில் உள்ள கூலிப்படைக்கு தரகராக இருந்து பணத்தை வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே, ஹரிகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை காலில் எடுப்பதற்கும் சேர்த்து மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களை காலில் எடுத்து விசாரணை செய்த பின் மேலும் பல்வேறு விவரங்கள் வெளியாகும் எனவும் மேலும் சிலர் கைதாககூடும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சாதியற்ற கிறிஸ்தவர்' சான்று கொடுங்க.. செல்போன் டவர் மீது ஏறி ஆர்பிஎப் காவலர் ஆர்ப்பாட்டம்.. அரக்கோணத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.