ETV Bharat / state

திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன? - Illicit Liquor Issue in Tirupur

TIRUPUR ILLICIT LIQUOR ISSUE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேரில் இரண்டு பேர் கோவை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 1:26 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப்பகுதியான மாவடப்பு செட்டில்மெண்ட் குடியிருப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாகவும், அங்கிருந்து வாங்கிச் சென்ற ரவிச்சந்திரன்(45) மற்றும் மகேந்திரன்(42) ஆகியோர் கோவை மாவட்டம் ஆனைமலை சாலையில் உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியில் இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மேலும் 3 பேர் என மொத்தம் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை விளக்கம்: இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயத்தால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும் வேறு ஏதோ காரணம் என விளக்கம் அளித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை இப்பகுதியில் கள்ளச்சாராயமே இல்லை என தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில், இன்று மதுவிலக்கு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அதில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்த உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோடு ஆயுள் முழுவதும் கடுங்காவல் தண்டனையோடு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.