ETV Bharat / state

"ஆண் நண்பருடன் சேர்ந்து அம்மா என்னை கொலை செய்ய பார்க்கிறார்" - போலீசில் சிறுவன் அளித்த பரபரப்பு புகார் - Son complaint on mother - SON COMPLAINT ON MOTHER

Son complaint on Mother: ஆண் நண்பருடன் இணைந்து தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருத்தணி காவல் நிலையம்
திருத்தணி காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:25 PM IST

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ணிமா (வயது 34). டிவி மெக்கானிக்காக வேலை செய்து வந்த இவரது கணவர் மோகன் முரளி கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.

கணவர் இறந்த பிறகு தனது மூன்று பிள்ளைகளுடன் பூர்ணிமா தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 12ஆம் வகுப்பு படித்து வரும் பூர்ணிமாவின் 17 வயது மகன் கடந்த 12ஆம் தேதி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், "தாய் பூர்ணிமாவை பார்க்க ஸ்ரீதர் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அவர் ஏன் இங்கு வருகிறார்? என்று கேட்டதற்கு தாய் அவர் எந்த நேரத்திலும் வருவார் என்றும் நீ அதையெல்லாம் கேட்கக்கூடாது என்றும் திட்டி எனது கன்னத்தில் அடித்தார்.

நான் ஸ்ரீதரை வீட்டை விட்டு வெளியேபோ என்று கூறியதும் எனது அக்கா என்னை அறையில் அடைத்து, எனது கை, கால்களை கட்டினார். எனது தாய் கம்பியினை சுடவைத்து உடம்பெங்கிலும் சூடுவைத்தார். மேலும் ஸ்ரீதரிடம் என்னை கொலை செய்யுமாறும், என்னிடம் இருக்கும் 4 லட்சம் பணத்தை வைத்து ஜாமீனில் எடுத்து விடுகிறேன் என்று கூறினார். எனது தந்தை விபத்தில் இறந்ததற்கு இழப்பீடாக எனது பெயரில் 4 இலட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

சிறிது நேரம் கழித்து என் கைகால் கட்டுகளை அவிழ்த்து இதோடு தொலைந்துபோ தொலைந்துபோ என்றும் வீட்டைவிட்டு வெளியேபோ மீறி வந்தால் இந்த இடத்திலேயே உன்னை கொன்று விடுவோம் என்று எனது தாயாரும், ஸ்ரீதரும் கொலைமிரட்டல் விடுத்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த 17 வயது சிறுவன், என்னை கொலை செய்ய முயன்ற தாய் பூர்ணிமா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய மாணவனின் தாத்தா ஆறுமுகம் (76), "நான் முன்னாள் ராணுவ வீரர். எனது மகன் மோகன் முரளி இறந்த பிறகு நாங்கள் இருந்த அந்த வீட்டில் மருமகள் பூர்ணிமா இருக்கட்டும் என்று நினைத்திருந்தோம்.

ஆனால், அவர் கள்ளக்காதலுடன் இணைந்து எனது 50 லட்சம் ரூபாய் வீட்டையும் அபகரித்துக் கொண்டார். தற்போது எனது பேரனையும் கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். நாங்கள் வயதானவர்கள் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இது தொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக காவல்துறை தலைவர் எங்களை காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அருப்புக்கோட்டையில் இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது.. பின்னணி என்ன? - Aruppukottai theft case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.