ETV Bharat / state

உயிரிழந்த தாயின் உடலை நடு வீட்டில் வைத்து சடங்கு.. மகன் தற்கொலை.. பெரம்பலூரில் பரபரப்பு! - suicide case in perambalur - SUICIDE CASE IN PERAMBALUR

Suicide case in Perambalur: பெரம்பலூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது சடலத்தை நடு வீட்டில் வைத்து சடங்குகளை செய்த மகன், அதே அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தவரின் வீட்டின் புகைப்படம்
உயிரிழந்தவரின் வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 10:10 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், முத்து நகர் விரிவாக்கப் பகுதியான கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீராம்குமார் (34). காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தனது 70 வயது தாயாருடன் வசித்து வந்ததாகவும், தற்பொழுது இருக்கும் வீட்டில் கடந்த ஓர் ஆண்டாக வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது தாயார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்ததாகவும், புகைப்படக் கலைஞரான இவர் நாள்தோறும் திருச்சிக்கு வேலைக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது தாயார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது உயிரிழந்த தாயாரின் உடலை தான் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டின் நடுவில் கிடத்திய ஸ்ரீராம்குமார், சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அவர் மேல் துணியைப் போர்த்தி பூஜை பொருட்கள், தர்ப்பை போன்றவற்றை வைத்து வணங்கி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டின் அனைத்து பகுதிகளையும் உட்புறமாக பூட்டிய ஸ்ரீராம்குமார், வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அதிக அளவில் பழகாத இவர்கள், கடந்த 10 தினங்களாக வெளியில் நடமாடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வீட்டின் உள்ளே இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஸ்ரீராம் குமாரும், அவரது தாயார் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெரம்பலூர் நகர போலீசார், இரண்டு உடல்களையும் அதே இடத்தில் வைத்து அரசு மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், சர்வானந்தம் - ஆனந்தி இருவரும் தம்பதிகளாவர். சர்வானந்தம் பூர்வீகம் திருவாரூர், ஆனந்தி பூர்வீகம் காரைக்குடி. தம்பதியரான இவர்களுக்கு ஸ்ரீராம்குமார், கிரிஜா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். சர்வானந்தம், தனலட்சுமி சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

மேலும், கிரிஜா தனியார் கல்லூரியில் படித்துவிட்டு வீட்டில் இருந்தவர் உடல்நிலை சரியில்லாமல் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, ஆனந்திக்கு சர்க்கரை வியாதி இருந்த காரணத்தினால் இரண்டு கால்களிலும் புண் ஏற்பட்டு செப்டிக் ஆகியுள்ளது.

இந்நிலையில், மேற்படி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சென்று பார்த்த போது கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. அதனை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் ஆனந்தி மற்றும் ஸ்ரீராம்குமார் ஆகியோரது சடலத்தை சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து ஆத்தூர் ரோட்டில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர்.

இதையும் படிங்க: மக்களவையில் முதல் பேச்சு.. துரை வைகோ எழுப்பிய ஐந்து விவகாரங்கள்! - DURAI VAIKO PARLIAMENT SPEECH

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.