ETV Bharat / state

அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது பாய்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீவிரமடையும் விசாரணை! - PRIEST KARTHIK MUNUSAMY CASE - PRIEST KARTHIK MUNUSAMY CASE

Sexual assault case: சென்னையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யபட்டுள்ள கார்த்திக் முனுசாமி
கைது செய்யபட்டுள்ள கார்த்திக் முனுசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:27 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர் அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய ஆறு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, கார்த்திக் முனுசாமி தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் தனிப்படை மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து, அவரை சென்னை அழைத்து வந்த போலீசார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும், இதனால் இவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்த 6 வழக்குகளில் பாலியல் தொல்லை கொடுத்தல் என்ற பிரிவினை மட்டும் நீக்கி பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இதே போன்று வேறு பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளாரா, இவருக்கு உடந்தையாக யாராவது செயல்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்ட கோயிலில் உடன் பணிபுரியும் நபர்களிடம் சம்மன் அனுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதேபோல், புகார் அளித்துள்ள பெண் தொகுப்பாளர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று முன்தினம் (மே 27) விசாரணைக்கு ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குண்டூசியை விழுங்கிய 14 வயது சிறுமி.. அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.