ETV Bharat / state

சுதந்திர தின விழாவில் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற முனைவர் குமரி அனந்தன்.. விருதுக்கு தேர்வாக காரணம் என்ன? - kumari Ananthan - KUMARI ANANTHAN

kumari Ananthan: 78வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

முதலமைச்சரிடம் விருது பெற்ற குமரி அனந்தன்
முதலமைச்சரிடம் விருது பெற்ற குமரி அனந்தன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 10:57 AM IST

சென்னை: தமிழக அரசு சார்பில் 78வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவிடித்தார்.

யார் இந்த முனைவர் குமரி அனந்தன்?: கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தார். காமராசரின் சீடராக விளங்கியவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராகவும், காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம்: மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைப் பெற்றுத் தந்தவர்.

நாடாளுமன்றத்தில் தமிழ்: இவர் 1977-ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பல முறை அவையில் போராடி பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் தொடர் முயற்சியால் 1978ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, தொடர்ந்து தமிழிலேயே பேசியவர்.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்: அவரின் முயற்சி வெற்றி பெற்றதைப் பற்றி குறிப்பிட்டு "தனிமரம் தோப்பாகாது" என்ற பழமொழியை குமரி அனந்தன் மாற்றி அமைத்து விட்டார் என்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பாராட்டியுள்ளார். தமிழகத்தில் பனை வளம் பெருக முழங்கியவர். தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். தமிழ்நாட்டில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர்.

காமராசர் விருது: கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவருக்கு 2021-ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதை வழங்கினார்.

'தகைசால் தமிழர்' விருது: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியதற்காக முனைவர் குமரி அனந்தனுக்கு 2024ஆம் ஆண்டிற்கான 'தகைசால் தமிழர்' விருதை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

Join ETV Bharat WhatsApp channel Click here
Join ETV Bharat WhatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சுதந்திர தின விழாவில் அப்துல் கலாம் விருது பெற்ற டாக்டர் வீரமுத்துவேல் - P Veeramuthuvel

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.