ETV Bharat / state

கள்ளக்குறிச்சி விவகாரம்: "குடிப்பவன் அளந்து பார்த்தா குடிப்பான்?" - கமலின் கருத்தை கலாய்த்த சீமான்! - Seeman about Kallakurichi issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 11:25 AM IST

Seeman Talk about Kallakurichi issue: கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது அரசு தன்னுடைய தவறை மறைப்பதற்கான லஞ்சம் எனவும், விக்கிரவாண்டியில் திமுக - நாதக இடையே தான் போட்டி எனவும் கூறிய சீமான், மது குடிப்பது குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு குடிப்பவன் எப்படி அளந்து பார்த்தா குடிப்பான் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன், சீமான் ஆகியோரது புகைப்படம்
கமல்ஹாசன், சீமான் ஆகியோரது புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu and NTK You tube)

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிட உள்ளார். இது தொடர்பான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நாதக நிா்வாகிகள் கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று, விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதைத் தொடா்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "கடந்த 2023ஆம் ஆண்டு மரக்காணத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை தடுத்திருக்கலாம். புயல், மழைக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழக அரசு கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எச்சரித்திருக்க வேண்டும்.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு எதற்கு ரூ.10 லட்சம்: அரசு நேரடியாக விற்றால் அது நல்ல சாராயம், வெளி நபர்கள் மறைமுகமாக விற்றால் அது கள்ளசாராயம். தான் செய்த தவறுகளை மறைப்பதற்காகவே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் அளித்துள்ளது. இது, கள்ளசாராயத்தை குடியுங்கள் என மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. அரசு தன்னுடைய தவறை மறைப்பதற்கே லஞ்சம் கொடுக்கிறது.

கமலின் கருத்துக்கு சீமானின் விமர்சனம்: இனி இன்சூரன்ஸ் எல்லாம் போட்டால் ரூ.2 லட்சம் ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், சாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்கிற மனநிலையை, மக்களிடத்தில் இந்த நிவாரணம் உருவாக்கும். நடிகர் கமலை சிறு வயதிலிருந்தே நான் பார்த்து வருகிறேன். அவர் அடையாத உயரம் இல்லை. ஆனால், அவர் ஏன் "குடிக்காதே என்று சொல்ல முடியாது. குறைவாக மது அருந்துங்கள்" என்று அறிவுரை கூறினார் எனத் தெரியவில்லை. குடிக்கப் போகின்றவன், அளந்து பார்த்தா குடிப்பான் அல்லது அதனைப் படித்துக் கொண்டு இருப்பானா?

நாதக ஆட்சியில் பூரண மதுவிலக்கு!: நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு எல்லாம் பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லையா? நான் ஆட்சியில் இருந்தால் ஒரு நொடியில் இதனை செய்வேன். அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்காது. விசிக தலைவா் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக பயன்படுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியா், எஸ்பி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பதால் பயனில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக மீது பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டை நானும் முன் வைக்கிறேன்.

கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை: இதற்காக சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது. சிபிசிஐடி யார் வசம் உள்ளது? தமிழ்நாடு அரசிடம் இருக்கும்போது, எப்படி நேர்மையான விசாரணை நடைபெறும். மரக்காணம் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்களே, பிறகு எதற்கு NIA உருவாக்கினார்கள்.

நீட் தோ்வை கொண்டு வந்தவா்களே திமுகவினரும், காங்கிரஸும் தான். எனவே, நீட் தோ்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அவா்களுக்கு தகுதியில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என மத்திய அரசிடம் திமுக கொடுத்த அந்த கோப்பு, அது என்னவாயிற்று? இதுவரை ரத்து செய்ய முடிந்ததா?

திமுக vs நாதக இடையேதான் போட்டி: இந்த இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு அமைச்சரும் ரூ.20 கோடி பணம் செலவழிக்கின்றனர். ஆனால், நாங்கள் ஒரு ரூபாய் கூட தர மாட்டோம். விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவுக்கும், நாம் தமிழா் கட்சிக்கும் தான் போட்டி. திராவிட அரசியலா.. தமிழ் தேசிய அரசியலா.. என்பதற்கான போட்டியே இது.

பரந்தூரில் ஒரு பொழுதும் விமான நிலையம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த நாங்கள் விடமாட்டோம். கடலில் பேனா சிலை வைக்க முடிந்ததா? அதேபோன்று தான் பரந்தூர் சம்பவத்திலும் நாங்கள் எதிர்த்து நிற்போம். இன்னும் 12 நாட்கள் இருக்கிறது. எங்களுடைய தேர்தல் களப்பணிகளை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "குடிக்காதே என்று கூற முடியாது.. குறைவாக மது அருந்துங்கள் என அறிவுரை வழங்கலாம்"- கமல்ஹாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.