ETV Bharat / state

கோவை, நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை.. 300 வீரர்களுடன் 10 பேரிடர் மீட்புக்குழு தயார்! - SDRF actions in TN - SDRF ACTIONS IN TN

SDRF Alert: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை என்ற அறிவிப்பை முன்னிட்டு, மீட்பு உபகரணங்களுடன் 300 வீரர்கள் அடங்கிய 10 பேரிடர் மீட்புக் குழுவினர் 4 மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மழை புகைப்படம்
மழைநீரில் பாதி மூழ்கிய வாகனங்களின் புகைப்படம் (credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 6:35 PM IST

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த 4 மாவட்டங்களில் மாநிலப் பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது என்று மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

இதில், ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில், 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள், கன்னியாகுமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் மற்றும் கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினர், அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் படிம் அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்று மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், இன்று (மே 17), நாளை (மே 18), நாளை மறுநாள் (மே 19) மற்றும் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகருக்கு உட்பட்ட சிங்காநல்லூர், புலியகுளம், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், ஹோப்ஸ் கல்லூரி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த மழையானது வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மழையின் காரணமாக ஓரிரு இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால், அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் பாதி அளவுக்கு நீருக்குள் மூழ்கிய படியே சென்றுள்ளது.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சம் இன்று பிற்பகல் வரை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 55 மில்லி மீட்டர் மழை, அம்பாசமுத்திரத்தில் 17 மில்லிமீட்டர் மழை, நாங்குநேரியில் மூன்று மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Rain Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.