ETV Bharat / state

வனத்துறையில் அவுட் சோர்சிங் முறையை ஏன் அரசு கைவிட வேண்டும்? வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுவது என்ன? - HUNT DETENTION GUARD

வனத்தைப் பாதுகாக்கும் எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, எனவே அரசு அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணி புரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேட்டைத் தடுப்பு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேட்டை தடுப்பு காவலர்கள் மனு அளித்தல்
வேட்டை தடுப்பு காவலர்கள் மனு அளித்தல் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 3:05 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமுண்டி, தலமலை, கடம்பூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறையில் இருந்து தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.

இது குறித்து வேட்டைத் தடுப்பு காவலர் மதன்குமார் கூறுகையில், “இந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானைகள் ஊருக்குள் புகாதபடி ரோந்துப் பணி, குற்றத்தடுப்பு, சாலையில் மரங்கள் அகற்றம் மற்றும் தமிழக வனப்பகுதிகளில் ரோந்து செல்வது, வனவிலங்கு வேட்டைகளை தடுப்பது, வனவிலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்”.

வேட்டைத் தடுப்பு காவலர் மதன்குமார் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

"இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணிபுரிந்தவர்களை பணிவரன்முறை செய்து, அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர்களை வெளி முகமை முறையில் (அவுட்சோர்சிங்) பணியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது".

"இவர்கள் வெளி முகமைக்கு மாற்றாமல், தொடர்ந்து தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் வனப்பகுதியில் இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். வனவிலங்குகளை பாதுகாப்பதில் முன்களப் பணியாளர்களாகவும், வனத்துறைக்கு அரணாகவும் இருந்து வருகிறோம்".

"வனவிலங்குகள் தாக்குதலில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக வேட்டைத் தடுப்பு காவலர் பணியாற்றிய நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வனத்துறை சார்பில் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை" என்றார்.

இதையும் படிங்க: கந்தசஷ்டி விழா: முருகனை காண பழனியில் குவியும் பக்தர்கள்.. எந்தெந்த நாள் என்ன நிகழ்வு விபரம் உள்ளே

மேலும் பேசிய அவர், “பணிவரன்முறையில் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்த்து வேலை செய்து வந்தனர். அண்மைக் காலமாக 10 ஆண்டுகளுக்கு மேல் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணிபுரிந்தவர்களை வனத்துறை பணியாளர்களாக அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால், தற்போது அவுட் சோர்சிங் முறையில் மாற்றப்பட உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது”.

“அப்படி மாற்றப்பட்டால் பணி பாதுகாப்பு இல்லாமலும், வனப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அரசு சார்பில் கிடைக்கும் நிதி உதவிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே, அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு பழைய நடைமுறையான தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேட்டைத் தடுப்பு காவலர்கள் வலியுறுத்தியுள்ளோம்”.

“வனத்தையும், வனவிலங்குகலையும் பாதுகாக்கும் எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்ற கவலை உள்ளது. இதற்கிடையே, தமிழக அரசு வேட்டைத் தடுப்பு காவலர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷிடம் கடந்த அக்.22ஆம் தேதி மனு அளித்துள்ளோம்” என்றார்.

மேலும், இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷிடம் கேட்டபோது, “தமிழகத்தில் உள்ள 5 புலிகள் காப்பகத்திலும் அவுட் சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பணி பாதுகாப்புக்காக காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுவதும், அவர்கள் தொடர்ந்து வனத்துறையிலிலேயே பணியாற்றுவார்கள்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.