ETV Bharat / state

அதிமுக ஒன்று கூட நேரம் வந்துவிட்டது: 2026ல் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டியே - சசிகலா பரபரப்பு பேச்சு! - sasikala says admk will unite soon

V.K.Sasikala: 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும், அப்போது நான் யார் என்பதைக் காட்டுவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

V K Sasikala
V K Sasikala
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 9:47 AM IST

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளது, 2026ல் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டியே என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சீதாம்பாள்புரத்தில் நேற்று (மார்ச்.20) நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வி.கே.சசிகலா. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் தான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும். மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக எனது அனுமானத்தில் கருதுகிறேன்.
தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது.

தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது என்று தெரியவில்லை. ஆவின் பாலில் புழு, பூச்சி உள்ளது இவற்றை முறையாகப் பராமரிக்க அரசு தவறவிட்டுவிட்டது.

தமிழக அரசின் தற்போதைய கவனம் பொய் சொல்லி எப்படியாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சியில் இது போன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பது அதிமுகாவிற்கும், திமுகவும் நேரடி போட்டியாக இருக்கும்.

அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்குப் பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டை, அவர் அதிமுகவைச் சேர்ந்தவர்தான். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.