ETV Bharat / state

சேலத்திலிருந்து திருச்சி NIT செல்லும் முதல் பழங்குடியின மாணவி சுகன்யா! - Salem TRIBAL STUDENT Passed JEE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 9:45 PM IST

Salem Tribal student select NIT Trichy: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி சுகன்யா திருச்சி என்ஐடியில் உற்பத்தி பொறியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

திருச்சி என்ஐடி மற்றும் மாணவி சுகன்யா
திருச்சி என்ஐடி மற்றும் மாணவி சுகன்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: ஜேஇஇ (JEE) 2024 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், மாணவி சுகன்யா திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்று, சேலத்தில் இருந்து திருச்சி என்ஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெயரை பெற்றுள்ளார்.

மாணவி சுகன்யா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி சுகன்யா. இவர் கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் - சின்னபொண்ணு பெற்றோராய் ஏற்று அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றதன் வாயிலாக, மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து மாணவி சுகன்யா கூறுகையில், “எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் எனக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தேன். ஆனால், ஆசிரியர்கள் உதவியால் எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு படித்தேன்.

அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன். எந்த தோல்வியும் நிரந்தரமானது அல்ல, மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் (Production Engineering) படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: JEE தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவி.. திருச்சி என்ஐடியில் வாய்ப்பு! - tribal student select NIT trichy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.