சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திமுக மாணவர் அணி போராட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நான் ஒரு வக்கீல் B.L படித்தவன், எழிலரசன் BE.BL படித்தவர். இதெல்லாம் குலத்தினாலோ கோத்திரத்தினாலோ வரவில்லை. திராவிட இயக்கம் போட்ட பிச்சை. திராவிட இயக்கமும், கம்யூனல் ஜி.ஓவும் இல்லை என்றால் இத்தனை டாக்டர்கள்.. இத்தனை பி.இ பட்டம் பெற்றவர்கள் வந்திருக்க முடியாது.
நான் பி.ஏ படித்த காலத்தில் ஊரில் ஒருவர் தான் B.A படித்திருப்பார். அப்போது பட்டத்தை வீட்டில் வெளியே பெயர் பலகையில் எழுதி வைப்பார்கள். இப்போது ஊரில் எல்லாரும் பட்டம் படிக்கிறார்கள். நாய் கூட B.A பட்டம் வாங்கும் நிலை வந்துருச்சி. இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் தான் காரணம். ஆனால், இதையெல்லாம் அழிப்பதற்காகவே நீட் தேர்வைக் கொண்டு வருகிறார்கள். அந்த நீட் தேர்வையும் குளறுபடிகள், மோசடிகள் செய்து தான் நடத்துகிறார்கள்" என ஆர்.எஸ்.பாரதி பேசினார். அவரது இந்த சர்ச்சைப் பேச்சு, மக்கள் மத்தியில் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்; பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! - Chennai Nagercoil Vande Bharat