ETV Bharat / state

அடுத்த 2 மாதங்களில் 10 பல்கலையில் பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை! - RN Ravi on Universities Graduation - RN RAVI ON UNIVERSITIES GRADUATION

TN Universities Graduation: அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பத்து பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 9:39 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி சார்பில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உரிய காலத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன்படி, கடந்த 2023ஆன் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு ஜூலை 31 வரை 20க்கு 18 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கம் நடத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முயற்சிகளை எடுக்குமாறு பல்கலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வரும் பல்கலை ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் காலதாமதமின்றி தங்கள் பட்டங்களைப் பெற இயலும்.

தேசிய தகுதித் தேர்வு எனப்படும் நெட் மற்றும் ஜேஆர்எப் எழுதும் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலைகளயும், உத்வேகத்தையும் பல்கலை துணைவேந்தர்கள் அளிக்க வேண்டும். இதன் மூலம் அம்மாணவர்கள் புகழ் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணிகளில் சேர முடியும்.

ஸ்டெம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆராய்ச்சி மாணவர்கள் காப்புரிமை பெறுவதற்கு தேவையான உதவிகளை துணைவேந்தர்கள் செய்ய வேண்டும். இதன் விளைவாக, மாநிலப் பல்கலைக்கழகங்கள் பெற்ற காப்புரிமைகளின் எண்ணிக்கை 2021-2022-ல் 206 என்ற எண்ணிக்கையில் இருந்து 2023-2024-ல் 386 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) முதல் 20 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைப்பதில் ஆளுநர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். வழங்கப்பட்ட காப்புரிமைகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, NET/JRF உதவித்தொகைகள் மற்றும் பல மாநில பல்கலைக்கழகங்களுக்கான மேம்பட்ட NIRF தரவரிசை ஆகியவை இந்த முயற்சிகளின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வலியுறுத்துகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியது” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.