ETV Bharat / state

இனி ஜில் தான் ப்ரோ.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு! - TAMILNADU RAIN UPDATE - TAMILNADU RAIN UPDATE

TAMILNADU RAIN UPDATE: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் மே 12ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை புகைப்படம்
மழை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:39 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலையையும் வெளியிட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. திருச்சியில் (விமான நிலையம்) 42.1 டிகிரி, மதுரையில் (விமான நிலையம்) 41.7 டிகிரி செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் (நகரம்) 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதே போல, ஈரோட்டில் 40.8 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (மே 8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை (மே 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 10ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 12ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 12ம் தேதி வரை, அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். மேலும், இன்று முதல் 12ம் தேதி வரை, அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் 12ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40 முதல் 55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 50 முதல் 85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55 முதல் 85 சதவிதமாகவும் ஆகவும் இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை (மே 9) அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

கடந்த 24 மணி நேரத்தில், கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) பகுதியில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலாலத்தூர் (வேலூர்), செங்கம் (திருவண்ணாமலை) பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மேட்டூர் (சேலம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), ஒகேனக்கல் (தர்மபுரி), வேலூர் (வேலூர்), குடியாத்தம் (வேலூர்), காட்பாடி (வேலூர்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சிதம்பரம் AWS (கடலூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கடலூர் (கடலூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), காரைக்கால் (காரைக்கால்), கடவூர் AWS (கரூர்), போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), ஏலகிரி ARG (திருப்பத்தூர் ) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெயிலுக்கு பிரேக் கொடுத்த கோடை மழை...பூமி குளிர மக்கள் மகிழ்ச்சி! - RAIN IN TAMILNADU

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.