ETV Bharat / state

"நீட் உயர்கல்வியின் அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது" - ராகுல் காந்தி ஸ்டாலினுக்கு கடிதம்! - Rahul letter to Stalin

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 3:03 PM IST

Neet Exam: நீட் தேர்வு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ராகுல் காந்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், "கடந்த ஜூன் 28ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஜூன் 4, 2024 அன்று நீட்- இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெரும் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும், பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக்கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.

மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது.

இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள்; வெளியான அதிர்ச்சி தகவல்! - Rowdy tiruvengadam Encounter

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.