தென்காசி: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி, 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரப் பணிகள் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 31) தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளுக்கான கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் எனவும், அனைவரும் தாங்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து செயல்பட வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசுகையில், "மற்ற கட்சிகளின் தலைமையிலான கூட்டணியில் 6, 7 கட்சிகள் என எண்ணிக்கையில் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். வாக்கு வங்கி என்று பார்க்கின்ற பொழுது ஒன்றும் கிடையாது. ஆனால், அதிமுகவின் கூட்டணி மிக வலுவான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. அதிமுக தொண்டர்கள் வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்கினால் எதிரே சந்திப்பதற்கு ஒருவரும் கிடையாது" என பேசினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு.. எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள் தெரியுமா? - Final Voters List In Tamil Nadu