ETV Bharat / state

வேடசந்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது சரமாரி தாக்குதல்.. காரணம் என்ன? - மனநலம் பாதித்தவர் மீது தாக்குதல்

Public Attack On Mentally Ill Person In Vedasandhur: வேடசந்தூர் அருகே குழந்தையைக் கடத்த வந்தவர் என நினைத்து, மனநலம் பாதித்தவரை பொதுமக்கள் தாக்கினர். பின்னர் போலீசார் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:35 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி பகுதியில், இன்று (மார்ச் 6) சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு நபர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் அந்த நபரைக் கண்ட பொதுமக்கள், அவர் குழந்தைகளைக் கடத்த வந்த நபர் என்று நினைத்து அவரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரைச் சுற்றி வளைத்த பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், பொதுமக்கள் தாக்கியதால் அந்த நபர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், காயமடைந்த நபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால், பொதுமக்கள் அந்த நபரை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க மறுத்து போலீசாரிடமும், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தாக்கியதால் கிறங்கிய அந்த நபரை, சிலர் மீட்டு தண்ணீர், டீ மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்தனர். பின்னர், காவல் துணை ஆய்வாளர் சித்திக், ராஜலிங்கன், கிருஷ்ணவேனி தலைமையிலான போலீசார் மற்றும் கொம்பேறிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

பின்னர், அந்த நபரை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிகிச்சைக்குப் பிறகு அந்த நபரை மனநல காப்பகத்தில் சேர்க்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, குழந்தைகளைக் கடந்த வந்த நபர் பிடிபட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபோல் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

fakenews
பொய் செய்தி பரப்பியவர் கைது

இதனிடையே, வேடசந்தூர் அருகே உள்ள பாம்புலுபட்டி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனியார் செய்தி தொலைக்காட்சி லோகோவைப் பயன்படுத்தி, அவரது ஊரைச் சேர்ந்த சிறுவனைக் கடத்த முயன்ற கடத்தல் கும்பலை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து எச்சரிக்கை செய்து அனுப்பியதாக பொய் செய்தியை அவரது மொபைலில் தயார் செய்துள்ளார்.

தயார் செய்த பொய் செய்தியை, கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்து வதந்தியை ஏற்படுத்தி உள்ளார். இந்த பொய் செய்தி வேகமாக பரவி உள்ளது. இந்நிலையில், இந்த பொய் செய்தி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அப்போது இது குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு பொய் செய்தி உருவாக்கிய இளைஞரை கைது செய்து, வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

இதையும் படிங்க: சனாதன விவகாரம் - அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.