கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 ஜோடிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். அவர்கள் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு வந்து, அதில் ஒருவரது ஆதார் அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து அதில் 2 ஜோடிகளும் (4 பேர்) தங்கி உள்ளனர்.
அதிகாலையில், சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞன் ஆகியோர் ஒன்றாக ஒரே அறையில் தங்கி இருப்பதும், அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து விடுதியில் தங்கி இருந்த 2 சிறுமிகள் 2 மாணவர்கள், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்தவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் 22 வயதான சதீஷ்குமார் என்பதும், இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் என 4 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து விடுதி உரிமையாளர் பால்ராஜ் (61), விடுதி மேலாளர் சிவன் (54), வாலிபர் குமார் (22) ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சிறுமி மற்றும் சிறுவனின் வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு; தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்