ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு? - விக்கிரமராஜா - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

Vikrama raja: வணிகர்களின் அதிக அளவிலான கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் ஆதரவு இருக்கும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

vikrama raja speech
நாடாளுமன்ற தேர்தல் 2024 குறித்து விக்கிரமராஜா பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 8:55 AM IST

நாடாளுமன்ற தேர்தல் 2024 குறித்து விக்கிரமராஜா பேச்சு

திண்டுக்கல்: பழனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று (பிப்.5) மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, "இந்த வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். அதில், முதல் தீர்மானமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்களுக்கான வாட் வரி 'சமாதான்' திட்டம் கொண்டு வந்ததன் மூலம் 2 லட்சம் வணிகர் குடும்பத்திற்கு ஒளியேற்றி வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு நாள்தோறும் சட்டங்களை மாற்றிக்கொண்டு ஜி.எஸ்.டி (GST) வசூலில் பெரும் குளறுபடி செய்து வருகிறது. இதனால், வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாகவே சட்டங்கள் உள்ளன்.

இதனை எதிர்த்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் டெல்லி செல்ல உள்ளேன். கொடைக்கானலில் கட்டிடம் கட்ட அனுமதி பிரச்னை இருப்பதற்கு ஒரு சிலர் நீதிமன்ற உத்தரவைப் பணம் பார்த்து வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லூ லூ மால் வராது என அரசு கூறியுள்ள நிலையில், அப்படி லூலூ மால் வருவதாக இருந்தால் வணிகர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்.

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று வலியுறுத்த உள்ளேன். பழனி அடிவார கிரிவல பாதையில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்படுவதால், தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. சுற்றுலா போன்ற இடங்களில் சிறிய வியாபாரிகளை அரசு பிழைக்க உதவிட வேண்டும்.

அரசு அவர்களை ஒழுங்கு படுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து அரசு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து வருகின்ற 27ஆம் தேதி திருநெல்வேலியில் மாநில பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது. வணிகர்களின் அதிக அளவிலான கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் ஆதரவு இருக்கும்" என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வாட் வரி சமாதான் திட்டம் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.