ETV Bharat / state

"விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்! - Premalatha Vijayakanth - PREMALATHA VIJAYAKANTH

Premalatha Vijayakanth: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தோற்கவில்லை எனவும் ஆளுங்கட்சியால் சூழ்ச்சி செய்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி புகைப்படம்
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 3:22 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil)

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி இணைந்து 1 கோடி வாக்குகள் பெற்று சாதனை படைத்திருக்கிறது. அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எங்கள் 5 வேட்பாளர்கள், அதிமுக வேட்பாளர்கள் என ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி. தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிறப்பாக பணியாற்றி நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். சென்னையில் பார்த்த சாரதி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.

விருதுநகரில் விஜய பிரபாகரன் கடைசி வரை களத்தில் ஒரு வெற்றி வேட்பாளராக நின்று, இறுதி வரை சென்று தோல்வியை தழுவியுள்ளார். விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இது தெரியும். அப்பா இல்லாத போது, இந்த தேர்தல் எதற்கு என அவர் என்னிடம் கேட்டார். ஆனால் அப்பா இல்லாத போது நீ நிற்க வேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு இணங்க அவர் அதனை செய்தார்.

விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி: அந்த தொகுதியில் மொத்தம் 10 லட்சம் வாக்குகள் உள்ளது. அவர் தோல்வி அடைந்ததாக சொன்ன வாக்குகள் 4,309 வாக்குகள் வித்தியாசம். விஜய பிரபாகரன் 0.4 சதவிகிதத்தில் தான் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால் நாங்கள் ஒப்புக் கொண்டிருப்போம். ஆனால் திட்டமிட்டு, சூழ்ச்சியால் தோல்வியடைய செய்துள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது.

வெளியே வந்த அறிவிப்புகளும், அந்த இடத்தில் இருந்த அறிவிப்புகளும் நிறைய முரண்பாடுகள் இருந்தன. ஏஆர்ஓ (ARO) இடமே நிறைய முரண்பாடு இருந்ததாம். 3 முதல் 5 மணி வரை எதற்காக உணவு இடைவெளி என வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது? அந்த இடத்தில் இருந்த கலெக்டர், எனக்கு அழுத்தமாக இருக்கிறது, எனது மொபைல் போனை அனைத்து வைக்க போகிறேன் என தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு அந்த அழுத்தம் கொடுத்தது யார் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.

விருதுநகரில் மட்டும் தான் நடு இரவு வரை தபால் ஓட்டு எண்ணப்பட்டுள்ளது. இது அனைத்துமே சூழ்ச்சி தான். இதனை தேர்தல் ஆணையத்திடம் நேற்றே இமெயில் மற்றும் கடிதம் மூலமாகவும் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை, விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தி உண்மை நிலவரத்தை அறிவிக்க வேண்டும். அந்த முடிவு என்னவாக இருந்தாலும் எடுத்துக் கொள்கிறேன்.

கவுண்டிங் சரி இல்லை, மறுவாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும் என பலரும் கேட்கிறார்கள். ஆனால் அங்கு இருந்த ஏஆர்ஓ அதனை கேட்காமல், நியாயம் பக்கம் செவி சாய்க்கமல் தொடர்ந்து எண்ணுகிறார்கள். தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே 40 தொகுதிகளிலும் திமுக வென்றது என எப்படி ஒரு முதல்வர் சொல்லுவார்? விருதுநகர் தொகுதியில் எப்படி முன்கூட்டியே திமுக வென்றது என சொல்கிறார்? அவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் விருதுநகர் ஏன் செல்ல வேண்டும்?. இரவு 1 மணிக்கு சென்று ஏன் அங்கே வெற்றி சான்றிதழைப் பெற வேண்டும்?. ஒரு சிறிய பையன் முதல் முறையாக தேர்தலில் நிற்கும் போது, அங்கு சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன?. மீண்டும் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். நாங்கள் அந்த மறுவாக்கு எண்ணிக்கையை ஒரு நீதிபதி முன்பு நடத்த கோரிக்கை விடுகிறோம்.

அது நியாயமாக நடக்க வேண்டும், என்ன முடிவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், 45 நாட்கள் வரை கேட்க எங்களுக்கு உரிமை இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். நீதிமன்றம் செல்வதில் பிரச்னை இல்லை, ஆனால் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பை வழங்குமா?. கடந்த 10 வருடங்களாக நாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருந்தோம். ஆனால் அப்போது நாங்கள் வெற்றி பெறவில்லை, இப்போது வெற்றி பெறவில்லை என்றால், ஏன் என்டிஏ கூட்டணியில் தொடராதது தான் காரணமா என கேட்கிறீர்கள்?.

அப்போதும் அப்படி தான், இப்போதும் வெற்றி பெறவில்லை. கூட்டணி குறித்து ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு வாக்காளர் வாக்கு எண்ணிக்கையின் போது நேரடியாக மகாலட்சுமி திட்டத்திற்காக கையெழுத்து வாங்கிய சம்பவம் நடந்த போதே அவர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். வேட்பாளரே ஒரு திட்டத்திற்காக வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்குகிறார் என்றால் அவரை அப்போதே தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் அதனை பார்த்துக்கொள்ளலாம் என அவர்கள் அதனை விட்டு வைத்திருக்கிறார்கள். எங்களிடம் அதற்கான தக்க ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளது.
பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்பதில் வருத்தப்பட எதுவுமே இல்லை. நாங்கள் எடுத்த முடிவு, நல்ல முடிவு தான்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், "54 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி வறுமையில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்களுக்கு சிறப்பு செய்வோம். நான் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக பணியாற்றி இருப்பேன், வெற்றின் பெற்றிருந்தால் விஜய பிரபாகரன் என்ன செய்வார் என மக்களுக்கு காட்டியிருப்பேன். மீண்டும் நான் வருவேன்" என்றார்.

இதையும் படிங்க: கோவையில் அதிமுக தோல்விக்கான காரணம் என்ன? - எஸ்.பி.வேலுமணி அளித்த விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.