ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் விற்பனையான சரக்கு மரக்காணம் சரக்கா? விசாரணையில் திடுக்கிடும் பின்னணி - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:59 AM IST

KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY: கள்ளக்குறிச்சியை கண்ணீரில் நனைய வைத்த கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. போலீசாரின் விசாரணையில், கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்டவை மரக்காணத்தைச் சேர்ந்தவை என கண்டறிந்துள்ளனர்.

கள்ளச்சாராய மரணம் தொடர்பான கோப்புப்படம்
கள்ளச்சாராய மரணம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கும் வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதைத்தொடர்ந்து பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைக்கிடமாகவும் இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்த பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 124 பேரில் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இந்த கள்ளச்சாராய இழப்பிற்கு காரணம்? என்னவென்று அறிய தடய அறிவியல் இயக்குனர் சண்முகத்தை அழைத்து வந்து போலீசார் சோதனை செய்தனர். அவர், சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கேள்விகளால் துருவி துருவி விசாரித்துள்ளனர். சாராய சப்ளையர் சின்னதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல, ஜோசப் ராஜ் என்பவர் போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாக இருக்கின்றார். இந்நிலையில், விசாரணையில் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, கண்ணுக்குட்டி வழக்கமாக, சின்னத்துரை மற்றும் ஜோசப் ஆகிய இருவரிடம் தான் சாராயம் வாங்குவதாகவும்; ஆனால், இந்த முறை சாராயம் வாங்கவில்லை எனவும் கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான மொத்த விற்பனை செய்யும் கள்ளச்சாராய வியாபாரியிடம் வாங்கியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று இரவோடு இரவாக மரக்காணம் சென்ற காவல்துறையினர் மரக்காணம் மருதூர் ராஜா என்ற கள்ளச்சார வியாபாரியைப் பிடித்து தற்போது விசாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால், கடந்த ஆண்டு மரக்காணம் சாராய சாவுகளுக்கு காரணமான ஹோல்சேல் வியாபாரி இப்போது வரை தனது கள்ளச்சாரய வியாபாரத்தை நடத்தி வருவதை போலீசார் கிட்டதட்ட உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாராயம் விற்ற மல்லிகா(42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 200-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயத்தால் வீட்டுக்கொரு மரணம்! மணிக்கொரு மரணம்! கண்ணீரில் கள்ளக்குறிச்சி - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.