சென்னை: தான் அனுப்பிய நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று இன்ஸ்டாகிராம் நண்பர் பணம் கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் புகார் அளித்துள்ள சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர், தனது நிர்வாண வீடியோவை வைத்துக்கொண்டு நண்பர் மிரட்டுவதாக நேற்று (நவ.08) இரவு புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண் மும்பையில் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் வளசரவாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் பழக்கமாகியுள்ளார். மேலும், அவ்வப்போது அந்த இளைஞருடன் வீடியோ காலில் பேசி வந்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இளைஞர் பெண்ணை அடிக்கடி நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், தன்னை காயப்படுத்திக் கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எம்எல்ஏவுக்கு வந்த நிர்வாண வீடியோ கால்.. நள்ளிரவில் வந்ததால் அதிர்ச்சி!
இதனால், இளம்பெண் இரண்டு முறை நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அந்த வீடியோவை வைத்துக்கொண்டு இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இளம்பெண்ணை மிரட்டி சுமார் 5 லட்சம் ரூபாயை இதுவரையில் இளைஞர் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது வீடியோவை வைத்துக்கொண்டு மேலும் 50 ஆயிரம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டுவதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்