ETV Bharat / state

என் புருஷன் கஞ்சா செடி வளர்க்குறாரு.. குடும்பத்தகராறு கைது வரை சென்றதன் பின்னணி என்ன? - Confiscated Ganja Plant - CONFISCATED GANJA PLANT

Confiscated Ganja Plant In Tirupathur: ஜோலார்பேட்டை அருகே வீட்டில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை கைது செய்து, கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் மற்றும் கஞ்சா செடி
குற்றம் சுமத்தப்பட்ட நபர் மற்றும் கஞ்சா செடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 8:05 PM IST

திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் நடந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வந்து அங்கேயே ஹோட்டல் வைத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தற்போது, இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், சிவபிரசாத் கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் கஞ்சா போதையில் ஜான்சியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சிவபிரசாத்தின் தொந்தரவு தாங்காமல் ஜான்சி கணவர் சிவபிரசாத் மீது திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில், இருவரையும் அழைத்து வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், ஏலகிரி மலையிலிருந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதிக்கு கடந்த மே மாதம் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இருந்த போதிலும், சிவபிரசாத் கஞ்சா பயன்படுத்துவதை நிறுத்தாமல் வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகளை நட்டு வைத்து அவ்வப்போது அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கஞ்சாவைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, தினமும் மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிலேயே கணவர் சிவபிரசாத் கஞ்சா செடியை வளர்த்து வருவதைக் கண்டறிந்த ஜான்சி, இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், சிவபிரசாத்தின் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் வளர்த்து வந்த 5 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக சிவபிரசாத்தின் மனைவி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் சிவபிரசாத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சா போதைக்காக சொந்தமாக வீட்டில் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து அதனை பயன்படுத்தி வந்த நபரை கைது செய்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகம் போலீஸ் மாநிலமாக மாறி வருகிறது" - பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.