அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தேவேந்திரன் என்பவரின் மகன் ராஜா (36) என்பவர் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர், மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ராஜா என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் பாஜகவுடன் இணைந்தாக சமக தலைவர் சரத்குமார் பேச்சு!