சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நேற்றைய தினம் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து ஒரு சில கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து விளக்கம் அளிக்க பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முற்பட்ட போது, சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் நேரத்தைக்கூட மக்கள் பிரச்சினை குறித்து பேச பாமக உறுப்பினர்களுக்கு அவையில் தருவதில்லை என்று கூறினார்.
இதையடுத்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு என்று பேசினாலே மைக்கை ஆப் செய்கிறார்கள். பாமக நிறுவனர் இடைத்தேர்தலுக்காக இட ஒதுக்கீடு குறித்து பேசுவது போல் போக்குவரத்து துறை அமைச்சர் பேசுவதாகவும், திமுகவினர் தான் தேர்தல் வரும் போதெல்லாம் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தில் பேச அனுமதி தரவில்லை என குற்றம் சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்தும் என கூறுவது காலம் தாழ்த்தும் செயல் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதன்முறை ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு ரூ.25 ஆயிரம் மானியம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு! - TN Assembly Session 2024