ETV Bharat / state

அதிமுக மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு! - KT Rajendra Balaji Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 3:56 PM IST

AIADMK Rajendra Balaji job scam case: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிமுக மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்ட வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை: விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் வெம்பக்கோட்டை பகுதியில் எலக்ட்ரானிக் கடையை நடத்தி வருகிறேன். அதிமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், வெம்பக்கோட்டையின் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பி என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ஆலோசித்து, எனது உறவினர் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளர் பணி வாங்கி தருவதாகக் கூறி என்னிடமிருந்து 30 லட்சம் ரூபாயை, கடந்த 2020ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக வேலை வாங்கி தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தேன்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை பெற்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கியதாக புகார் அளித்ததால், அதன் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முன்ஜாமீன் கூட பெறவில்லை, அதேநேரம், கைது செய்யப்படவும் இல்லை. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வழக்கறிஞர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை: மத்திய அரசை நாட நீதிபதிகள் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.